2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

எதிரணிக்கு ஆலோசனை வழங்க சட்டத்தரணி குழு

Kanagaraj   / 2012 நவம்பர் 17 , பி.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றவியல் பிரேரணையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள  நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இடம்பெற்றுள்ள எதிரணி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக சட்டத்தரணிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்திலுள்ள எதிர்கட்சி தலைவர் காரியாலயம் அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவின்  ஆலோசனையின் பிரகாரமே சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு எதிரவரும் 23 ஆம் திகதி சமூகமளிக்குமாறு பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அந்த திகதிக்கு முன்னர் சட்டத்தரணிகள் குழு நியமிக்கப்படும் என்றும் எதிர்கட்சி தலைவர் காரியாலயம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .