2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

இலஞ்ச விவகாரம்; பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 19 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்யாமல் இருப்பதற்காக அவரிடமிருந்தே 100,000 ரூபாவை இலஞ்சமாக பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் நிலையம்  ஒன்றின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருடப்பட்டதாகக் கூறப்படும் பொருட்களை வைத்திருந்த சந்தேக நபரை கைதுசெய்யாது விடுவதற்காக அவரிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியையே விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்;.

புறக்கோட்டை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்; பிரிவு பொறுப்பதிகாரி; பொலிஸ் நிலைய வளாகத்தினுள் வைத்து ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றபோது அவரையும் அவருடன் இருந்த மற்றுமொரு பொலிஸ் சார்ஜனையும் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதுசெய்தனர்.

இந்த இருவரையும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியபோது,  இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார். (சனத் டெஸ்மன்ட்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .