2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

தங்கம் வென்ற வீரருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்மால் சூரியகொட)

தெற்காசிய விளையாட்டுப் போட்டியின் போது தங்கப்பதக்கம் வென்ற ரங்க விமலவன்சவையும் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சீனப் பெண் ஒருவரிடமிருந்து நான்கு மில்லியன் ரூபா பணத்தை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்றில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவம் கடந்த முதலாம் திகதி இடம்பெற்றுள்ளது. கொள்ளுப்பிட்டி கமெரன் பிளேஸில் இடம்பெற்ற இந்த கொள்ளையின் போது பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கி ஒன்றையும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர்களான இருவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி இடம்பெறவுள்ள அடையாள அணிவகுப்பில் நிறுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .