2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இலங்கை - சுரிநாம் இராஜதந்திர உறவு ஆரம்பம்

Super User   / 2012 நவம்பர் 19 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கை மற்றும் சுரிநாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு இன்று திங்கட்கிழமை தெரிவித்தது.

இது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்த வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித கோஹன மற்றும்  ஐக்கிய நாடுகளுக்கான சுரிநாமின் நிரந்த வதிவிட பிரதிநிதி ஹென்றி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

இதன் ஊடாக அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் இரு நாடுகளின் பொது இலக்குகளை ஐக்கிய நாடுகளில் பகிர்ந்து கொள்ளவுள்ளது. 

எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் உயர் மட்ட விஜயங்களை மேற்கொள்ள இரு தூதுவர்களும் இணங்கியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .