2021 ஜனவரி 16, சனிக்கிழமை

இஸ்ரேலை கண்டிக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை

Super User   / 2012 நவம்பர் 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிப்தி அலி)

பலஸ்தீன், காஸா பகுதியில் இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக கண்டம் வெளியிடுமாறு பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

காஸா பகுதியில் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தின் விசேட கூட்டம் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது. இஸ்ரேல் படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கண்டம் வெளியிட வலியுறுத்துவது என இந்த கூட்டத்திலேயே தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் பஸ்தீன் ஒருமைப்பாட்டுக்கான இலங்கை இயக்கத்தின் பொது செயலாளர் என்.களுதந்திரி கையொழுத்திட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு இன்று செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பபட்டுள்ளது.

இலங்கைக்கான பஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல் அஹா, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான லத்தீப் பாரூக், என்.எம்.அமீன் மற்றும் ஹமீட் அப்துல் கரீம் உட்பட பலர் இந்த விசேட கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .