2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

திருட்டு குற்றச்சாட்டு; இலங்கை பணிப்பெண்ணுக்கு சிறை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று இலட்சம் வரையில் பெறுமதியான நகைகளையும் பணத்தையும் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 34 வயதான இலங்கை பணிப்பெண் ஒருவருக்கு டுபாய் குற்றச்செயல் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்தது.

இவரது சிறைக்காலம் முடிந்தவுடன் இவரை நாடு கடத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் பணித்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தனது வீட்டில் 12 வருடங்கள் வேலை செய்ததாகவும் செப்டெம்பர் மாதம் 10 இல் 4000 தினார் காணாமல் போனதாகவும் வீட்டின் உரிமையாளரான ஆசிரியை முறையிட்டதை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டார்.

"அடுத்த வீட்டில் வேலை செய்த பணிப்பெண் எனது பணிப்பெண்ணை பார்சல் ஒன்றை தனது வீட்டுக்கு அனுப்ப உதவும்படி கேட்டார். உதவுவது போல நடித்துக்கொண்டிருந்த சந்தேக நபர் சில பொருட்களை அந்த பொதியில் வைத்தார்.

சந்தேகம் கொண்டு அதை சோதித்தபோது காணாமல் போன பணமும் எனது ஆடைகளும் காணப்பட்டன. இவரை மேலும் சோதித்தபோது எனது நகைப் பெட்டியின் திறப்பை அவர் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் திருடிய காப்பை என்னிடம் கொடுத்தார்"  என இந்த ஆசிரியை தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .