2021 மே 06, வியாழக்கிழமை

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் பயிற்சி வழங்கும்: ஏ.கே.அந்தோனி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 11 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை மற்றும் அதனை அண்டிய நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்தும் குறுகிய மற்றும் நீண்டகால பயற்சிகளை வழங்கி வருவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சிகள் தொழில்நுட்பம் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சாராத துறைகளில் நடைபெறுவதாக அவர் லோக் சபாவில் கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்தினருக்கு இன்னும் இந்தியா பயிற்சி வழங்கி வருகிறதா என பி.லிங்கம், பரபோத் பந்தி ஆகிய அங்கத்தவர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ பயிற்சியை மாறி வழங்கும் திட்டத்தின்படி இலங்கை உட்பட பல்வேறு நாடுகளுடனும் இராணுவ பயிற்சி பரிமாறப்படுவதாக அவர் கூறியுள்ளார்.  தேவைக்கேற்ப, பாதுகாப்பு, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அமைந்துள்ள பல்வேறு மாநிலங்களில் பயிற்சிகள் நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதில் பிரச்சினை உண்டா என கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் அந்தோனி, 'தேசிய நலனில் சகல அம்சங்களையும் கருத்திற்கொண்டு இந்தியா செயற்படுவதாக' அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .