2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

பயிற்சிபெற்ற தொழிலாளர்களை ஆப்கான் அனுப்ப இலங்கை தீர்மானம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானை மீளக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டிலுள்ள கலைச் சொத்துக்களை மீளமைக்கவும் பங்களிக்கும் வகையில் பயிற்சிபெற்ற தொழிலாளர்களை அனுப்ப இலங்கை அரசாங்கம் உடன்பட்டுள்ளது என ஒரு கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் சல்மைய் றசூல் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரிடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தின்போது ஆப்கானிஸ்தானில் தொழில் வாண்மையுடையோரையும் பயிற்றப்பட்ட மனித வளத்தையும் உருவாக்க வேண்டிய தேவையும் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பில் இருபக்க உடன்படிக்கை ஒன்றை இலங்கை முன்மொழிந்துள்ளது.

இலங்கை பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான் மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழில்நுட்பம் ஆகிய கற்கைகளில் கூடுதல் இடம் தரும்படி ஆப்கானிஸ்தான், இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுள்ளது.

இதற்கு சாதகமாக இலங்கை பதிலளித்துள்ள நிலையில், கட்டணம் அறவிடும் அடிப்படையில் கூடுதல் இடங்களை வழங்க இலங்கை சம்மதித்தது. அத்துடன், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் இலவசமாக இருவரை பயிற்றவும் இலங்கை முன்வந்தது என கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .