2021 ஜனவரி 27, புதன்கிழமை

புகலிட கோரிக்கையாளர்கள் தென்கொரியாவில் கைது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 26 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, மியன்மார் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச்சேர்ந்த புகலிட கோரிக்கையாளர்களை குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது.

இதில் 21 பேர் மியன்மார் நாட்டு பிரஜைகள் என்று தென்கொரியா நீதியமைச்சு அறிவித்துள்ளது.

தென்கொரியாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையானது 1997 ஆம் ஆண்டு 12 ஆக இருந்ததுடன் 2004 ஆம் ஆண்டு 100 ஆக உயர்ந்தது.

2011 ஆம் அந்த தொகை 1000 பேரை கடந்துவிட்டதாக குடிவரவு அதிகாரிகள் தெரிவித்ததாக தென்கொரிய ஊடக நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தொழில்புரிவதற்கான காலத்தை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலேயே பணத்தை செலுத்தி போலியான முறையில் அவர்கள் புகலிடம் கோரியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .