2021 ஜனவரி 23, சனிக்கிழமை

புலிகளுக்கு ஆயுதம் வாங்க முயன்ற குற்றச்சாட்டு: அமெரிக்காவில் வழக்கு

Kanagaraj   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கனேடியத் தமிழ் இளைஞர்கள் இருவருக்கு எதிரான விசாரணைகள் அமெரிக்க நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

பிரதீபன் நடராஜா (36), சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா (32) ஆகிய இருவருக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகளே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்கள் இருவரையும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தக் கூடாது என்று கோரி கனேடிய உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே அவ்விருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்விருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்வனவு செய்ய  முயன்றதாக அவ்விருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .