2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

ராட்சத முதலை இறந்து கரை யொதுங்கியது

Editorial   / 2026 ஜனவரி 15 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

இறந்த நிலையில் ராட்சத முதலை ஒன்று காத்தான்குடி பாதையில் கரையொதுங்கிய உள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதை வாவியில் 15 நாட்களுக்குள் இறந்து கரை ஒதுங்கிய இரண்டாவது முதலை இதுவாகும்

கடந்த மாதம் இறுதி பகுதியில் ராட்சத முதலை ஒன்று அதே வாவியில் இறந்து கரை ஒதுங்கியது

 இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் புதன்கிழமை (14) இரவு  கரை ஒதுங்கியுள்ளது

குறித்த வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் அடிக்கடி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியிருந்த நிலையில் மீண்டும் இரண்டாவது முதலை இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது

கரை ஒதுங்கிய முதலையை பார்வையிட அதிகளவிலான மக்கள் கூடி வருவதையும் அவதானிக்க முடிகின்றது

இறந்த இந்த முதலை 12 அடியைக் கொண்டது என தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X