2021 ஜனவரி 20, புதன்கிழமை

பாவனைக்கு உதவாத பெரிய வெங்காயங்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் பலவற்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பாவனைக்கு உதவாத 45 தொன் பெரிய வெங்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  

நுகர்வோர் விவகார அதிகாரசபையால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த வெங்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மக்கொல்லம் வீதி, கொழும்பு, குருநாகலை, வெலிசர ஆகிய இடங்களில் உள்ள களஞ்சியசாலைகளிலேயே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பழுதடைந்த வெங்காயங்களை சந்தைப்படுத்தவுள்ளதாக உள்நாட்டு வர்த்தக மற்றும் கூட்டுறவு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த பழுதடைந்த  வெங்காயங்கள் கூடிய விரைவில் சந்தைப்படுத்துவதற்கு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த வெங்காயங்கள் தம்புள்ளையில் உள்ள  வர்த்தகர் ஒருவரினால் கொள்வனவு செய்யப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பழுதடைந்த வெங்காயங்களை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் சகல ஊழியர்களையும் உடனடியாக இடைநிறுத்தம் செய்யுமாறு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். (யொஹான் பெரேரா, அஜந்த குமார அகலகட)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .