2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மத்திய, வடமேல் மாகாண சபைகளுக்கு ஏப்ரலில் தேர்தல்?

Kanagaraj   / 2013 ஜனவரி 01 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை  இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக  நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அத்துடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களில் பரந்தளவில் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம் பொலிஸ் அதிகாரங்களில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவருவதற்கும் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவைத்தொடர்பிலான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் இவ்வருடம் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளது.

அதுமட்டுமன்றி சட்டமூலம் ஒன்று ஒன்பது மாகாணசபைகளிலும் நிறைவேற்றப்படவேண்டும் என்ற சட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .