2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல்

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 02 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து மருந்துகளுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று தெரிவித்துள்ளார். 

ஒரே கம்பனியில் தயாரிக்கப்பட்ட ஒரே மருந்தை பல்வேறு மருந்தகங்கள் பலதரப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

'முன்னர் உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் மருந்தாளர்கள் விலையை குறிப்பிட்டனர். ஆனால் வர்த்தமானி அறிவித்தலின்படி  உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மாத்திரமே இதைச் செய்யமுடியும்' எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

'பலதரப்பட்ட விலைகளில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை நிறுத்துவதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்து மருந்து விற்பனை தொடர்பாக மேலும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாங்கள் எண்ணியுள்ளோம்'

அடுத்தபடியாக மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். (யொஹான் பெரேரா,அஜித் சிறிவர்தன)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .