2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

உயர் நீதிமன்றம் நிரூபித்துள்ளது: கிரியெல்ல

Kanagaraj   / 2013 ஜனவரி 03 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார)

நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளும் கடப்பாடு நாடாளுமன்றத்திற்கு இருக்கின்றது என்று ஐ.தே.க. உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தெரிவுக்குழு அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்த பின்னர்,  அரசியலமைப்பை ஆக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இருப்பினும் உயர் நீதிமன்றத்திற்கு  மட்டுமே அதற்கு வியாக்கியானம் கொடுக்க முடியும்.
 
அரசியலமைப்புக்கு வியாக்கியானம் கூறும் பொறுப்பு உயர் நீதிமன்றத்துக்கு மட்டுமே உரியதாகும். எனவே நாடாளுமன்றம் உட்பட ஒவ்வொரு நிறுவனமும் அதன் வியாக்கியானத்தை ஏற்கவேண்டிய கடப்பாடுடையது.

இந்நிலையில், நாடாளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேறியது நியாயமானது என உயர் நீதிமன்றம் நிரூபித்துள்ளது என அவர் கூறினார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி  ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .