2025 ஜூலை 03, வியாழக்கிழமை

அகதிகள் நாடு திரும்புவதற்கு இலங்கை அரசின் முன்னெடுப்புகள் அதிகம் தேவை: ஐ.நா

Menaka Mookandi   / 2013 ஜனவரி 04 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து திரும்புவதை மக்கள் சாதகமாக பரிசீலிக்கும் நிலைமையை உருவாக்குவதற்கு அம்மக்களின் தாயகமான இலங்கையின் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் நிறைய இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அன்ரோனியோ குட்டெறஸ் கூறியுள்ளார்.

'வாழ்க்கை நிலைமை, வேலை, கல்வி, சுகாதாரம், சொத்து, பாதுகாப்பு என்பவற்றுடன் தொடர்புபட்ட நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இயலுமான சகலவற்றையும் இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும்' என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் இணைந்து மக்கள் தாமாக இலங்கைக்கு திரும்பிவர வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இவ்விரு அரசாங்கங்களும் ஆராய வேண்டும். இங்கு 'தாமாக திரும்புதல்' என்பது முக்கியமான விடயமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டும்' என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .