2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

பிரதம நீதியரசருக்கு எதிரான வழக்கு : நீதியரசர்கள் குழுவை நியமிக்க தீர்மானம்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 06 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ் செல்வநாயகம்

அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி பிரதம நீதியரசருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கை விசாரிப்பதற்காக முழுமையான நீதியரசர் குழு நியமிக்கப்படவுள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கே கடந்த 1 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே முழுமையான நீதியரசர் குழுவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.

சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்குவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கு உயர்நீதிமன்றத்தில் கடந்த 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தாம் சம்பந்தப்பட்டிருப்பதால், தாம் அதனை விசாரணை செய்ய முடியாது என்று பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விசாரணை குழுவிலிருந்து விலகிக்கொண்டார். அத்துடன் அக்குழுவைச்சேர்ந்த மற்றுமொரு  நீதிபதியான ஸ்ரீபவனும் விலகிக்கொண்டார்.

இந்நிலையில் இந்த மனு புதிய நீதிபதிகளின் குழு முன்னிலையில் விசாரணைக்கு ஏற்கவேண்டும் என்று சட்டத்தரணி  கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே முழுமையான நீதியரசர் குழுவை அரசியலமைப்பின் 132(3) ஐஐ அமையவே புதிய நீதியரசர்கள் குழு நியமிக்கப்படவிருக்கின்றது.

சுங்க வரி ஏய்ப்பு தொடர்பாக ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, தற்போதைய பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ், தான் சட்ட மா அதிபராக இருந்தபோது தவறான முறையில் வாபஸ் பெற்றதாகவும் இந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போதைய தலைமை நீதிபதி இலங்கை அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டமா அதிபரான தற்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஒரு நிறுவனத்திடமிருந்து 619 மில்லியன் ரூபாவை சுங்கமாக பெறுவதை தடுத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவருக்கு எதிராக இந்த வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

  Comments - 0

  • அமலன் Wednesday, 06 February 2013 11:07 AM

    நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகின்றது என்பதை சும்மா ஒப்பாசாரத்துக்கேனும் காண்பியுங்கள் அதையும் செய்ய முடியாது விட்டால் மக்கள் எதை நம்புவது?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--