2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

நூதனசாலைக் கொள்ளை; நீதவானிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.பாருக் தாஜுதீன்

நூதனசாலையில் களவில் பங்கெடுத்த 8 சந்தேக நபர்கள் பற்றி கொழும்பு பிரதான நீதவானிடம் புலனாய்வு பொலிஸார் விவரமான ஓர் அறிக்கையை நேற்று சமர்ப்பித்தனர்;.

ஒன்பதாவது சந்தேக நபரான எல்.பிரியசாந்தவை களவு நடந்த தினம் நூதனசாலை வளவில் கண்டதாக நூதனசாலை காட்சியறைகளுக்குப் பொறுப்பான அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த சில்வா நீதவானிடம் கூறினார்.

இந்த அதிகாரியும் களவு போன நாணயத்தாள்களை வாங்கியதாகக் கூறப்படும் பெற்றோல் நிலைய முகாமையாளர் திஸாநாயக்கவும் அடையாளம் காட்டுவதற்காக 9ஆவது சந்தேக நபர் பிரியசாந்த அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்படவுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களிடையே பாகுபாடு காட்டுவதாக சந்தேக நபர்களின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறினார்.
 
நூதனசாலையிலிருந்து அகற்றப்பட்ட வைரம், தங்கம் என்பவற்றை வாங்கியதாகக் கூறப்படும் பிரதான சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சில பழைய நாணயங்களையும் பித்தளை துண்டுகளையும் வாங்கிய தனது வாடிக்கையாளருக்கு பிணை மறுப்பதாகக் கூறினார்.

தனது கட்சிக்காரர்களையும் பிணையில் விட வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டார்.

வாதப்பிரதிவாதங்களை அவதானித்த நீதவான் சந்தேக நபர்களை பெப்ரவரி 20 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--