2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பிரதம நீதியரசர் இந்த மனுவை விசாரிப்பது முறையா? சட்டத்தரணி

Kanagaraj   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எஸ்.செல்வநாயகம்

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க அரசுக்கு 2014 பில்லியன் நட்டம் விளைவித்ததாக கிரேக்க பிணைகளில் முதலீடு செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரரின் சட்டத்தரணி இந்த உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசர் விசாரிப்பது முறையாகுமா? என்பதையிட்டு மனதில் கொள்ளுமாறு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் கேட்டுக்கொண்டார்.

சட்டத்தரணியான உபுல் ஜயசூரிய, அவர் தனிப்பட்ட முறையில் மத்திய வங்கியின் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததால்தான் தான் இவ்வாறு வேண்டுவதாக கூறினார்.

தனக்கு சகல மனுதாரர்களையும் தெரியும் எனவும் அவர் கவலைப்படதேவையில்லை எனவும் பிரதம நீதியரசர் கூறினார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் கொண்ட குழுமம் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க முடியுமா? என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக மனுமீதான விவாதத்திற்கான திகதியை மார்ச் மாதம் 25 ஆம் திகதிவரை ஒத்திவைத்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--