2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

பௌத்த படையை உருவாக்க முயற்சி: குமரகுருபரன்

Kanagaraj   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

பல்லின மக்கள் வாழுகின்ற நாட்டில் பௌத்த படையை உருவாக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இனவாத தாக்குதலுக்கு அப்பால் தற்போது மதவாதத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள அஸாத் சாலி மன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

சமயத்தின் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. பல்லின மற்றும் பல கலாசாரங்களை கொண்ட மக்கள் நாட்டில் வாழ்கின்றனர்.

பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. எதிர்வரும் காலங்களில் இந்து மற்றும் கிறிஸ்தவம் ஆகிய சமயங்கள் மீதான தாக்குதல்கள் முன்னெடுக்கலாம்.

பல்லினங்கள் வாழும் நாட்டில் பௌத்த படைகளை உருவாக்கி மக்களுக்கு வாலையும் பௌத்த படைகளுக்கு தலையையும் காண்பித்து மதவாதத்திற்கு மறைந்திருந்து ஆதரவளிக்கின்றது.

அரசாங்கம் தனது இரு முகங்களை காண்பித்துக்கொண்டிருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருந்தாலும் அந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--