2026 ஜனவரி 07, புதன்கிழமை

நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

Freelancer   / 2026 ஜனவரி 05 , பி.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

335 ரூபாயாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் 05 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 340 ரூபாயாகும். 

277 ரூபாயாக இருந்த ஒட்டோ டீசல் 02 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 279 ரூபாயாகும். 

318 ரூபாயாக இருந்த சுப்பர் டீசல் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 323 ரூபாயாகும். 

மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது. 

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .