2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

சென்னையில் ஐ.நா அலுவலகம் முற்றுகை; வைகோ, நெடுமாறன் கைது

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 12 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறியதைக் கண்டித்து சென்னையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பழ. நெடுமாறன், வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களைத் தடுக்கக்கோரி சென்னையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தின் முன்பாக தீக்குளித்த முருகதாசனின் நினைவுநாள் இன்றாகும். 

இதையொட்டி இலங்கையில் மனித உரிமை மீறல்களைத் தடுக்கத் தவறிய ஐ.நா. சபையைக் கண்டித்தும் இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று காலை பழ. நெடுமாறன், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--