2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

மலேவீதியை சேர்ந்தவர்களுக்கான மாற்று ஏற்பாடு உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Kanagaraj   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ் செல்வநாயகம்

டாட்டா வீடமைப்பு அபிவிருத்தி நிறுவனத்திற்கு இலவசமாக தமது நிலங்களை எடுத்துக்கொடுப்பதற்காக தம்மை வெளியேற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக முறையிட்ட மலேவீதியை சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மாற்று ஏற்பாடுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை உயர்நீதிமன்றத்திடம் நேற்று சமர்ப்பித்தது.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் சார்பில் ஆஜரான பி.சி சஞ்சீவ ஜயவர்தன பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்வருமாறு நிவாரணங்களை வழங்குவதாக அறிவித்தார்.

1.நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்குகின்ற தற்காலிக வீடுகளில் குடியேறுதல்.

2.நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கும் நிலத்தில் தாம் இப்போது வசிக்கும் வீட்டிலிருந்து அகற்றக்கூடிய பொருட்களையும் நிதியுதவியையும் பயன்படுத்தி தாம் ஒரு வீட்டையமைத்து தற்காலிகமாக அங்கு வாழ்தல்.

3.தற்போது வசிக்கும் வீட்டின் அளவிற்கேற்ப நகர அபிவிருத்தி அதிகாரசபை வழங்கும் வாடகையை பெற்றுக்கொண்டு தமக்கு வசதியான வேறு இடத்தில் வாழ்தல்.

4.அரசாங்க பெறுமதிக்கேற்ப தமது சொத்துக்கான பெறுமதியை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நிரந்தரமாக வெளியேறுதல்.

ஆகிய மாற்றுத்தெரிவுகளை வழங்குவதாக தெரிவித்தார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தியமைச்சின் செயலாளர் தலைமையில் நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் டாட்டா பிரதிநிதிகள் பங்குப்பற்றிய கூட்டத்தில் வீட்டுரிமையாளர்களுடன் நடந்த கலந்துரையாடலின் பின் இந்த தெரிவுகளை நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தரணிகள் சமர்ப்பித்தார்.

இந்த திட்டத்தை முன்னெடுப்பதனால் 517 வீட்டுரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வீட்டுரிமையாளர்கள் 301 பேர் தங்களுடைய கருத்துக்களை நேரடியாக தெரிவித்தனர் என்று அவர் நீதிமன்றுக்கு தெரிவித்தார்.

சட்டத்தரணியின் வாதத்திற்கு செவிசாய்த்த நீதிமன்றம் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் 18 ஆம் திகதி தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்ததுடன் அன்றைய தினத்திற்கு வழக்கை ஒத்திவைத்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--