2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைக்காக அரசாங்கம் மீண்டும் விண்ணப்பிக்காது

Kogilavani   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

ஜி.எஸ்.பி.பிளஸ் வசதியை இழப்பதன் விளைவுகள் தொடர்பில் ஏற்றுமதியாளர்கள் விசனம் தெரிவித்துள்ள போதிலும் அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைக்காக மீண்டும் விண்ணப்பிக்க போவதில்லை என பிடிவாதமாக உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

நல்லாட்சியை வலுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செய்த பரிந்துரைகளில் சிலவற்றை அரசாங்கம் மறுத்ததை தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வசதியை ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2010 இல் இரத்து செய்தது.

இந்த வசதி காரணமாக ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு முன்னுரிமை அடிப்படையில் இலங்கையில் ஏற்றுமதி செய்ய முடிந்தது.

ஆனால், இந்த வசதி இழக்கப்பட்ட பின் இலங்கை ஏற்றுமதியாளர்களால், ஜி.எஸ்.பி. பிளஸ் பெற்ற நாடுகளுடன் ஐரோப்பிய சந்தையில் போடடியிட முடியவில்லை.

இதனால், சில முதலீட்டாளர்கள்  இலங்கையில் தமது உற்பத்திகளை நிறுத்திவிட்டு பங்களாதேஷில் முதலீடு செய்துள்ளனர்.

ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை மறுக்கப்பட்டதால் தைத்த ஆடைகள், மீன் பதனிடல் ஆகிய  கைத்தொழில்கள் மோசமாக பாதிப்படைந்துள்ளன.

அரசாங்கம் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகைகேட்டு மீண்டும் விண்ணப்பிக்குமா என கேட்ட போது அது நடக்காத விடயம் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பி.பிளஸ் தெரிவித்தார்.


  Comments - 0

  • deedoo Friday, 15 February 2013 03:50 PM

    இது ஆரம்பம்.....!!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--