2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து காமினி விடுவிப்பு

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் காமினி சமரநாயக்கவுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகயை உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை கொண்டுவந்ததுடன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தது.

இந்த பிரச்சினை இயன்றளவுக்கு தீர்த்துவைக்கப்பட்டுள்ளதால் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அடங்கிய குழு நீதிமன்ற நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தது.

நீதிமன்ற கட்டளைக்கு அமைய இஸட் புள்ளிகளை வெளியிடுவதற்கு நியாயமான நடவடிக்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் காமினி சமரநாயக்க எடுக்காதுவிட்டார். இதனால் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தின் பேரில் ஏன்? நடவடிக்கை எடுக்கக்கூடாது என காரணம் காட்;டுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கு அறிவித்தல் விடுத்தது.

2011 கல்விப் பொதுத்தராதர உயர் தர இஸட் புள்ளி சர்ச்சையில் உயர் நீதிமன்றின் தீர்ப்பை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுக்கு செயற்படுத்தவில்லை என உயர் நீதிமன்றத்தில் பிரேரணையொன்றின் மூலம் இலங்கை ஆசிரியர் சங்கமும் உயர் தர மாணவர்கள் 16 பேரும் ஜுலை 13ஆம் திகதி முறையிட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .