2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இராஜினாமா செய்வேன்: மேர்வின்

Kogilavani   / 2013 ஜூலை 21 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நான் குற்றம் இழைத்தவன் என்று கட்சி மட்டத்தில் அல்லது ஏதேனும் நீதிமன்றத்தில்  நிரூபிக்கப்படுமானால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தேர்தல் தொகுதியின் அமைப்பாளர் பதவியை இராஜனாமா செய்வேன்' என பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் அமைந்துள்ள விஷ்னு ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்ட பின் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"சில நாடோடி அரிசியல்வாதிகளை போன்று மற்றுமொரு தேர்தல் தொகுதியை நான்பொறுப்பேற்க தயாரில்லை" என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

"களனி எனது உயிரை போன்றது. நான் தத்தெடுத்த குழந்தையின் கையில் அதனை கொடுப்பதற்கு தயாரில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

 • KB Sunday, 21 July 2013 06:18 PM

  அவருடைய பழைய வரலாறு தெரிந்தவர்கள் சொல்லுவார்கள் தலைப்பு 'குற்றம் நிரூபிக்கப்படுமானால் இராஜினாமா செய்வேன்' என்பதற்குப் பதிலாக 'ஜனாதிபதி சொன்னால் இராஜினாமா செய்வேன்' என இருக்கவேண்டும் என்று.

  Reply : 0       0

  AMBI Monday, 22 July 2013 11:21 AM

  பிஸ்சுத... மே அமத்துமா ஹொந்த மனுசியா... அகிம்சக மினியா...

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--