2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

இலங்கை விவகாரம்: புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க முடிவு

Kanagaraj   / 2013 ஜூலை 22 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

13 ஆவது திருத்தத்திலுள்ள அதிகாரங்களை குறைப்பதற்கு இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்களை, நிறைவேற்றுமாறு  வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக நடத்தப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'டெசோ' கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை, நிறைவேற்றுமாறு வலியுறுத்தி எதிர்வரும் 08 ஆம் திகதி வியாழக்கிழமை திராவிட முன்னேற்ற கழகத்தின்  மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் புதுடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தி.மு.க அறிவித்துள்ளது.

அது மட்டுமன்றி இலங்கையில் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய மாநாட்டில் இந்திய பங்குபற்றக்கூடாது என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றும் திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X