2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

அதிவேகநெடுஞ்சாலை நிர்மாணித்தால் அரசியலிலிருந்து விலகுவேன்: பீலிக்ஸ்

Kanagaraj   / 2013 ஜூலை 23 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்பொல பட்டுவத்தையூடாக அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படமாட்டாது. அவ்வாறு நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்பட்டால் அரசியலிலிருந்து தான் விலகிக்கொள்வேன் என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார்.

நாரங்கொடபாலுவ மற்றும் வல்பொல பட்டுவத்தையூடாக நிர்மாணப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள வடக்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வல்பொல கிராமத்தை சேர்ந்தவர்கள் ரயில் தண்டவாளத்தை மறித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்திற்கு வந்தே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அந்த இடத்திற்கு வந்துகொண்டிருந்தபோது பிரதேசவாசிகள் ரயில் தண்டவாளங்களில் டயர்களை எரித்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X