2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

சீரற்ற காலநிலை நீடிக்கும்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 23 , மு.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை நாளைவரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

தென்மேல் பருவக்காற்றுக் காரணமாக மத்திய, சப்ரகமுவ, மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை நகரங்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தென் கடற்பரப்பு பகுதிக்கு அப்பால் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை கன்யொன், மேல் கொத்மலை லக்ஷபானா, காஸில்றீ ஆகிய நீர்த்தேக்கங்களில் உச்ச அளவுக்கு நீர் நிரம்பியுள்ளதால் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமைகளைக் கருத்திற்கொண்டு குறித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களை பாதுகாப்புடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. (டி.எஸ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--