2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத புகலிடகோரிக்கையாளர்கள் குடியமர்த்தப்படமாட்டார்கள்: ஆஸி

Kanagaraj   / 2013 ஜூலை 26 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டியான் சில்வா

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகுகளில் வருவோர் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்களென கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்தது.

ஐக்கிய நாடுகளின் அகதிகள் சமவாயத்துக்கு அமைய இவர்கள் அகதி அந்தஸ்துக்கான தகுதியை கொண்டிருப்பினும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்படமாட்டார்களென இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பதில் உயர்ஸ்தானிகர் சொனயா கொப்பி தெரிவித்துள்ளார்.

கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அவுஸ்திரேலியாவுக்கு விஸா இல்லாமல் வந்து, அகதி அந்தஸ்துக்கான தகுதியை உண்மையாகவே கொண்டிருப்பினும் அவர்கள் பப்புவா நியூகினியில் குடியமர்த்தப்படுவர். இதற்கான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியாவுக்கும் பப்புவா நியூகினிக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

ஜூலை  19 இல் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தப்படி விஸா இன்றி அவுஸ்திரேலியாவருவோர் பப்புவா நியூகினி சட்டப்படி விசாரிக்கப்பட்டு மதிப்பிடப்படுவர்.

இந்த திகதிக்கு முன் வந்தவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்க சட்டப்படி அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் விசாரிக்கப்படுவர்.
வியாழக்கிழமை இரவு அவுஸ்திரேலியா வந்தவர்களும் ஆரோக்கிய சோதனையின் பின் பப்புவா நியூகினிக்கு சொந்தமான மனுஸ் தீவில் 200 மக்கள் தங்குவதற்கான வசதி உள்ளது.

இது 3000 ஆக அதிகரிக்கப்படும். அவுஸ்திரேலிய தீவான் கிறிஸ்மஸ் தீவில் 2000 பேர் தங்கும் வசதிகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X