2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

இருதாரமணம் கப்புறாளைக்கு சிறை

Kanagaraj   / 2013 ஜூலை 29 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்மால் சூரியகொட

முதலாவது மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொடு பெண்ணை திருமணம் செய்த மொரட்டுவவிலுள்ள கப்புறாளைக்கு இருதாரமணம் எனும் குற்றத்திற்காக ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவானினாலேயே இந்த தண்டனை நேற்று திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தண்டனையுடன் 1500 ரூபா தண்டமும் இவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

கப்புறாளையின் இரண்டாவது மனைவி செய்த முறைப்பாட்டின் பேரிலேயே கப்புறாளை கைது செய்யப்பட்டார். இவர் முதலில் திருமணமானவர் என்பதை மறைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாக அவர் கொழும்பு, மோடி விசாரணைப் பணியகத்தில் முறையிட்டிருந்தார்.

முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி, இரண்டு திருமண அத்தாட்சி பத்திரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து சந்தேக நபர் இருதார குற்றம் புரிந்திருப்பதனை நிரூபித்தார். இதனையடுத்தே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--