2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

தேர்தல் மோசடியை தடுக்க முன்வரவும்: வராவெவ

Kanagaraj   / 2013 ஜூலை 30 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சந்துன் ஏ.ஜயசேகர

நடைபெறவிருக்கின்ற மாகாணசபை தேர்தலில் தேர்தல் வன்முறை, ஒழுங்கீனங்கள், அரசதரப்பு வேட்பாளர்கள் அரச சொத்துக்களை பிரசாரத்திற்கு பயன்படுத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு வாக்காளர்களும், சிவில் சமூகத்தினரும் அரசியல் கட்சிகளும் முன்வரவேண்டும் என்று ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதியும் ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட வேட்பாளராக நியமிக்கவுள்ளவருமான பீ.பி. வராவெவ  தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரியவை வராவௌ நேற்று சந்தித்ததன் பின்னர் தேர்தல்கள் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வாக்காளர்கள் தமது உரிமைகளை பயன்படுத்தாதுவிடின் ஒரு சுதந்திரமான,நியாயமான தேர்தலை நடத்தமுடியாது. தேர்தல் சட்டங்களை பொலிஸ் மீறினால் தேர்தல்கள் ஆணையாளராலும் எதுவும் செய்யமுடியாது என்றும் அவர் கூறினார்.

வாக்களிப்பு நிலையங்களுக்குள்ளும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள்ளும் அமைச்சர்கள் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--