2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

குடும்ப அங்கத்தவர்களை களமிறக்க அரசு முஸ்தீபு: ஜே.வி.பி

Kanagaraj   / 2013 ஜூலை 30 , பி.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள் பலரை மாகாண சபை தேர்தலில் களமிறக்குவதற்கு அரசாங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளதாக ஜே.வி.வி குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆட்சி முறைமையின் உயர்மட்டத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுவதால் அதனை முன்னுதாரணமாக கொண்டு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் மாகாண சபை தேர்தலிலும் தமது உறவினர்களை போட்டியிடவைக்க ஆயத்தமாகிவருகின்றனர் என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் கண்டி மாவட்டத்திலிருந்து பிரதமர் தி.மு.ஜயரட்னவின் மகனை வேட்பாளராக அவர் நியமித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தனது சகோதரனையும் மைத்துனனையும் களமிறக்க தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இவர்களோடு அமைச்சர்களான ஜனக பண்டார தென்னக்கோனின் மகன், பொது பொழுதுபோக்கு அமைச்சர் ஜயரத்ன ஹேரத்தின் மகன், சர்ச்சைக்குரிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவின் மருமகன்,சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கவின் மனைவி, வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவின் மகன் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

மக்கள் விடுதலை முன்னணி வடமேல் மற்றும் மத்திய ஆகிய இரு மாகாண சபைகளிலும் உள்ள மாவட்டங்களில் பட்டத்தாரிகளையே குழுத்தலைவர்களாக களமிறக்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X