2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

டேன் பிரியசாத் படுகொலை : துப்பாக்கிதாரி கைது

Freelancer   / 2025 செப்டெம்பர் 19 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபர்களிடம் இருந்து 12,400 சட்டவிரோத சிகரெட்டுகள் மற்றும் பல கஜமுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவர்கள் கேகாலை மற்றும் வெலிஓய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். சந்தேகநபர்களில் ஒருவர் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து விலகியவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X