2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

மீனவர் விவகாரம்: பிரதமருக்கு ஜெயா மீண்டும் கடிதம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 15 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 65 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 35 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நேற்று கைது செய்யப்பட்ட 37 மீனவர்கள் உட்பட 65 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை பிரதமர் வலியுறுத்த வேண்டும். இப்பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு இந்திய தூதரகம் மூலம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--