2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

வடமாகாண முதலமைச்சருக்கு புதுடில்லி அழைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 16 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கெலும் பண்டார

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். ஏதோ ஒன்று நடைபெறமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார்.

இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென அறிவதற்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.


  Comments - 0

  • Sumathy M Wednesday, 16 October 2013 10:38 PM

    வாழ்த்துக்கள் ஐயா... சென்று வாருங்கள், வென்று வாருங்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--