2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தானாகவே பயணித்த ரயில் இயந்திரத்தில் கோளாறு இல்லை

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 05 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரேகா தரங்கனி

மாளிகாவத்தை ரயில் நிலையத்திலிருந்து இரத்மலானை வரை தானாகவே இயங்கிய ரயிலின் இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்று இது தொடர்பில் விசாரணை நடத்திய மூவரடங்கிய குழு அறிவித்துள்ளது.

ரயில் சாரதி இல்லாமல் ரயில் இயந்திரமொன்று தானாகவே பயணித்த சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது.

மாளிகாவத்தையில் ரயில்கள் நிறுத்திவைக்கப்படும் இடத்திலிருந்து தானாகவே இயங்கி பயணித்த மேற்படி ரயில், கல்கிஸைக்கும் இரத்மலானைக்கும் இடையில் ரயில்வே அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த ரயில் சாரதியும் அவரது உதவியாளரும் உடனடியாகப் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இக்குழுவே தானாகவே இயங்கிய ரயிலின் இயந்திரத்தில் எவ்வித கோளாறும் இல்லை என்று தங்களது விசாரணையின் பின்னர் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .