2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

எட்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டு பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 10ஆம் திகதி   இடமாற்றப்படவுள்ளனர்.

இவர்களுக்கான இடமாற்றம் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனினால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரத்தினபுரிக்கும் கேகாலைக்கும் பிரதி பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றி வந்த  மகேஷ் பெரேரா பொலிஸ் விசேட பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில்; கடமையாற்றிவந்த கித்சிறி கணேகம புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X