2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

வரவு – செலவுத் திட்டம் பணக்காரர்களுக்கு உரியது: ஐ.தே.க

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹபீல் பாரிஸ்)

வெளிநாட்டு வங்கிகளில் உள்ள நிதிகளை வேறு கணக்குகளுக்கு மாற்ற அனுமதியளித்துள்ள, பந்தய கார்களின் வரிகளை குறைத்துள்ள இந்த வரவு – செலவுத் திட்டம், நாட்டின் பெரும் பணக்காரர்களுக்கானது எனவும் இது பரந்துபட்ட மக்களுக்கு எந்தவொரு நிவாரணத்தையும் கொடுக்கவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது.

மக்கள் தொகையில் 99 சதவீதமானோரை இந்த வரவு – செலவுத் திட்டம் அந்தரத்தில் விட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறினார்.

இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டின் சனத்தொகையில் 0.1 சதவீதமானோருக்காக கொண்டுவரப்பட்டது. யாருக்கு பந்தயக் கார்கள் தேவை? இது மக்களுக்கு உள்ள ஒரு பிரச்சினையா?

வெளிநாட்டு வங்கிகளிலுள்ள பணத்தை கேள்வியின்றி இலங்கைக்கு கொண்டுவர இது அனுமதியளிக்கின்றது. இது பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுமென நான் நினைக்கின்றேன் என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் விவசாயிகள், கடற்தொழிலாளர்கள், கடின வேலை செய்து உழைப்போருக்கு எந்தவித நன்மையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கறுப்பு பணத்தை சுதந்திரமாக எடுத்துச் செல்லவும் கொண்டுவரவும் இந்த வரவு – செலவுத் திட்டம் வழி செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .