Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 18 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2010ஆம் ஆண்டு இறுதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஐக்கிய அமெரிக்காவின் ஜி.எஸ்.பி. திட்டம் 2013ஆம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சின் கீழுள்ள வர்த்தக திணைக்களம் இன்று அறிவித்தது.
இதற்கான அங்கீகாரம் வழங்கும் பிரேரணையில் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா விரைவில் கையொழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அத்திணைக்களம் தெரிவித்தது.
ஜி.எஸ்.பி. திட்டம் நீடிக்கப்படுவதனை வரவேற்பதாக வர்த்தக திணைக்களம் தெரிவித்தது.
இச்சட்டத்தில் ஒபாமா கையொப்பமிட்டால் ஜி.எஸ்.பி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் உள்ளடக்கும் அனைத்து பொருட்களுக்கும் பூச்சிய சத வீத வரியே விதிக்கப்படும்.
ஜி.எஸ்.பி திட்டத்தின் கீழ் இலங்கை உட்பட 131 அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருட்களை அமெரிக்காவின் தீர்வையற்ற சந்தையில் விற்க முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago