2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் அத்தியட்சகரின் கொலைச் சந்தேகநபர்கள் இருவர் கைது

Menaka Mookandi   / 2014 மார்ச் 23 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹங்வெல்ல, துண்ணான பிரதேசத்தில் வைத்து பொலிஸ் அத்தியட்சகர் பிரசாத் சிறிவர்தன கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

33 மற்றும் 51 வயதுடைய நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் திருகோணமலை பிரதேசத்தில் வைத்தும் மற்றையவர் இரத்தினபுரியில் வைத்தும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கைதான சந்தேகநபர்களை அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .