2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இந்தியா ஏமாற்றிவிட்டது: த.தே.கூ

Kanagaraj   / 2014 மார்ச் 27 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைபு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்  தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது,

அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரித்துள்ள அவர் இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.

  Comments - 0

  • Thineshkanth Friday, 28 March 2014 02:54 AM

    வைச்சான் பாரு பெரிய ஆப்பு......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .