2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

உயிருக்கு போராடும் இலங்கையர்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தன் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டிக்கொண்டதால் அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

ஜனார்த்தனன் எனும் 30 வயதிலும் குறைந்த இந்த இளைஞர், தற்காலிக விஸாவுடன் சுத்திகரிப்பு தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.
18 மாதங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்துவந்த இவரது முழுமையான  பாதுகாப்புக்கான விஸா விண்ணப்பம் மறுக்கப்பட்டதால், இவர் இலங்கைக்கு திரும்பவேண்டுமென்று அறிவிக்கப்பட்டதாக தமிழ் அகதி மன்ற ஏற்பாட்டாளர் ரெவர்; கிறான்ற் கூறியுள்ளார்.

இவர் புதன்கிழமை தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்டார். இவரது உடம்பில் எரிகாயமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .