2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

மத்தல பார்க்கச் சென்ற ஐ.தே.க எம்.பி.க்களுக்கு தொந்தரவு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அங்கு கூடியிருந்த சிலர் 'ஹூ' வைத்து கூச்சலிட்டுள்ளதுடன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இருப்பினும், அவ்வாறு கூச்சலிட்டவர்களைத் தடுக்க பொலிஸாரோ படையினரோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த இடத்துக்கே பாதுகாப்பு தரப்பினர் செல்லவில்லை என்று அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விமான நிலையத்தைப் பார்வையிடுவதற்காக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் மன்னப்பெரும, எரான் விக்கிரமரத்ன, அஜித் பெரேரா, நலின் ஜயமக மற்றும் ஆர்.யோகராஜன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை (17) சென்றுள்ளனர்.

விமான நிலையத்தை சுற்றிப் பார்த்த எம்.பி.க்கள் குழு, விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து விமான நிலையம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டு புறப்படும் போது, அவர்கள் பயணித்த பஸ் இருக்கும் இடத்துக்கு வந்துள்ள சிலர் எம்.பி.க்களுக்கு தொந்தரவுகளைக் கொடுத்துள்ளனர்.

விமான நிலையம் தொடர்பான பொய்ப் பிரசாரங்களை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என அக்குழுவினர், எம்.பி.க்களுக்கு குறிப்பிட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஐ.தே.க எம்.பி.க்கள், அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இங்கு வந்ததாக குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--