2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இலங்கை போரில் இந்தியப்படை விவகாரம்: மனு தள்ளுபடி

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இந்திய இராணுவம் போர்க்களத்தில் இருந்ததாகத் தெரிவித்து டெல்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை டெல்லி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை போரில் இந்தியப்படையினர் பங்கேற்றமை தொடர்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கரினால் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு, மனு தாரரின் கோரிக்கையானது நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--