2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

வில்பத்துவை பாதுகாப்பேன்: ரிஷாத்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


வில்பத்து வனாந்தரத்தை சுத்தப்படுத்தி அங்கு முஸ்லிம்கள் எவரையும் குடியமர்த்தவில்லை. வில்பத்து எல்லையில் முஸ்லிம் கிராமங்கள் நான்கு இருக்கின்றன. அந்த கிராமங்களிலேயே 300 குடும்பங்கள் குடியேறியுள்ளனர் என்று தெரிவித்த அமைச்சர் ரிஷாட் பதூர்தீன், விலங்குகள்,மரங்கள் மற்றும் வனாந்தரங்களின் மீது அன்பு செலுத்துகின்ற தான், வில்பத்துவை பாதுகாப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை(17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கிலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் உடுத்திய உடையுடன் இரண்டு மணிநேரத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

வில்பத்து எல்லையிலுள்ள காணிகளில் தற்போது குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. அங்கிருந்த 79 பள்ளிவாசல்கள், 60 பாடசாலைகள் மற்றும் 22 ஆயிரம் வீடுகள்  சேதமாக்கப்பட்டுள்ளன.

தற்போது குடியேறியுள்ளவர்களுக்கு காணி உரிமைப்பத்திரம் இருக்கின்றது. வில்பத்து வனாந்தரத்தில் ஒரு அங்குலம் கூட சுத்தம் செய்யவில்லை. பழைய கிராமத்தில் இருக்கின்ற பழைய பள்ளிக்கு அருகிலேயே புதிய பள்ளி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

வில்பத்து வனாந்தரத்தில் 20 ஆயிரம் ஹெக்டேயர்களை சுத்தம் செய்து பள்ளிவாசல்களை நிர்மாணித்து வீடுகளை கட்டியுள்ளதாக பொதுபல சேனா குற்றஞ்சாட்டியுள்ளது முற்றிலும் பொய்யாது என்றும் அவர் கூறினார்.

  Comments - 0

  • ibnu aboo Thursday, 17 April 2014 01:54 PM

    பொதுபல சேனா எப்போதாவது உண்மை கூறியுள்ளதா..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--