2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானின் பாதுகாப்பு பிரதிநிதிகள் இலங்கை விஜயம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 21 பிரதிநிதிகள், நாளை (21) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த உயர்மட்ட இராணுவக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் நோயேல் இஸ்ராயேல் கோபார் தலைமை தாங்கவுள்ளார்.

ஒருவார காலம் தங்கியிருக்கும் இவர்கள் இலங்கையின் பாதுகாப்பு, பொருளாதாரம், தேசிய மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் பற்றி ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை வரும் இந்த பாகிஸ்தான் பிரதிநிதிகள், பாதுகாப்புச் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகளையும் சந்திக்க உள்ளதுடன் யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--