2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

சபை அமர்வில் பங்குபற்ற ஐ.தே.க உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

Super User   / 2014 ஏப்ரல் 22 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.ஸட்.ஷாஜஹான்


மேல்  மாகாண சபையின் முதலாவது அமர்வு இன்று(22)  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது, சபை அமர்வில் கலந்து கொள்ள  ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் அவர் விலங்கிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு நகை விற்பனை மற்றும் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில்  கைது செய்யப்பட்ட ரொயிஸ் விஜித்த பெர்னாந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று மாத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  மேல்  மாகாண சபையின முதலாவது அமர்வு இன்று(22) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது ரொயிஸ் விஜித்த பெர்னாந்து உட்பட ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.

ஆயினும், சபை அமர்வில் கலந்து கொள்ள ரொயிஸ் விஜித்த பெர்னாந்துவுக்கு  பொலிஸார் அனுமதி அளிக்க மறுத்ததுடன் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் பொலிஸாரினால் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X