2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

விளையாட்டு துப்பாக்கி:சபாநாயகர் கவலை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தல விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடுவதற்கு சென்ற ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் இன்று கவலை தெரிவித்தார்.

கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பதில் எதிர்க்கட்சி தலைவர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் இன்று முறையிட்டதையடுத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான அமைச்சர் பொறுப்பு கூறவேண்டும் என்றும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இவ்விரு இடங்களையும் பார்வையிடசென்ற ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் ஹம்பாந்தோட்டை நகரசபைத்தலைவர் எராஜ் பெர்னண்டோ துப்பாக்கியை ஏந்தியவாறு துரத்தி துரத்தி அச்சுறுத்தினார்..

இந்நிலையில் தான் வைத்திருந்த துப்பாக்கி விளையாட்டு துப்பாக்கியென்று அவர் பின்னர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0

  • ibnu aboo Thursday, 24 April 2014 03:33 PM

    ஜனாதிபதி இந்த சம்பவத்தை எதிக்கட்சிகளின் கேலித்தனம் என்று கூறியுள்ளார். ஆனால் சபாநாயகர் கவலை தெரிவிக்கிறார்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--