2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

புத்தரை பச்சை குத்திய விவகாரம்: மனு விசாரணைக்கு ஏற்பு

Kanagaraj   / 2014 ஜூலை 03 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு வருகைதந்த பிரித்தானிய பெண் ஒருவரின் இடதுகையில் புத்தரின் உருவம் பச்சை குத்தப்பட்டிருந்த காரணத்தினால் அவரை நாட்டிலிருந்து வெளியேற்றியதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான சலீம் மர்சூக், சந்திரா ஏக்கநாயக்க மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .